உலக செய்திகள்

தன்னுடன் சண்டையிட்ட ஆண் ஒருவரின் நாக்கை முத்தம் கொடுப்பது போல் கடித்து துப்பிய இளம்பெண் + "||" + girl bit the tongue of the man who fought with her and spat

தன்னுடன் சண்டையிட்ட ஆண் ஒருவரின் நாக்கை முத்தம் கொடுப்பது போல் கடித்து துப்பிய இளம்பெண்

தன்னுடன் சண்டையிட்ட ஆண் ஒருவரின் நாக்கை முத்தம் கொடுப்பது போல் கடித்து துப்பிய இளம்பெண்
தன்னுடன் சண்டையிட்ட ஆண் ஒருவரின் நாக்கை முத்தம் கொடுப்பது போல் கடித்து துப்பிய இளம்பெண் ஒருவர் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
லண்டன்

ஸ்காட்லாந்தின் கடந்த 2019ம் ஆண்டு எடின்பர்க் பகுதியில் ஜேம்ஸ் மெக்கென்சி எனபவர் பெத்தானே ரியான் என்ற பெண்ணிடம் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது விரைவில் மோசமான சண்டையாக மாறியது. இதில் பயங்கர கோபமுற்ற ஜேம்ஸ் மெக்கென்சி, ரியானை அடிக்க பாய்ந்துள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட ரியான் ஜேம்ஸை கீழே தள்ளி உதட்டில் முத்தமிட்டுக் கொண்டே அவரது நாக்கை அழுத்தமாக கடித்து நாக்கில் இருந்து ஒரு பகுதியை கீழே துப்பியுள்ளார்.

அப் போது ஒரு பெரியகடல் பறவை, அந்த நாக்கை அவர் கண் முன்னாலேயே தூக்கிச் சென்று விழுங்கியது ஜேம்ஸ்  இரத்தம் கொட்டும் வாயுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவரது நாக்கை அந்த பறவை விழுங்கிவிட்டதால், மருத்துவர்களால் அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியாமல் போய்விட்டது.இனி, வாழ்நாள் முழுவதும் நாக்கில் பாதி இல்லாமலேதான்  ஜேம்ஸ் வாழ்க்கை நடத்தி வருகிறார்

இதுதொடர்பாக நடந்து வந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜரான ரியான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதன்பின் அவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீல் மார்ட்டின், சம்பவம் நடந்த அன்று எனது கட்சிக்காரர் வித்தியாசமாக நடந்து கொண்டுள்ளார் என தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2. 15 வெளிநாடுகளில் தலைமை பதவிகள் வகிக்கும் 200 இந்திய வம்சாவளியினர்
அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 15 வெளிநாடுகளில் 200 இந்திய வம்சாவளியினர் தலைமை பதவிகளை வகித்து வருகிறார்கள்.
3. சென்னை டெஸ்ட் :இந்திய அபார வெற்றி ; அஸ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317- ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
4. சென்னை 2-வது டெஸ்ட் : வலுவான நிலையில் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
5. சென்னை டெஸ்ட்: 2-வது இன்னிங்ஸில் தடுமாறும் இந்திய அணி
இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி தடுமாறி வருகிறது.