சீனாவில் மனித உரிமைகள் மீறல் விவகாரம்: ஐ.நா. அமைப்பு தலையிட இங்கிலாந்து வலியுறுத்தல்


சீனாவில் மனித உரிமைகள் மீறல் விவகாரம்:  ஐ.நா. அமைப்பு தலையிட இங்கிலாந்து வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Feb 2021 1:11 AM GMT (Updated: 23 Feb 2021 1:11 AM GMT)

சீனாவில் சிறுபான்மையின மக்கள் மீது நடந்து வரும் மனித உரிமைகள் விவகாரம் பற்றி ஐ.நா. அமைப்பு பேச வேண்டும் என இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது.

லண்டன்,

சீனா மற்றும் ரஷ்யா உறுப்பினர்களாக உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 46வது கூட்டத்தொடரில் இங்கிலாந்து நாட்டு வெளியுறவு மந்திரி டாமினிக் ராப் கலந்து கொண்டார்.  அவர் பேசும்பொழுது, ஐ.நா. கவுன்சில் சரியாக இல்லை.  மனித உரிமை விவகாரங்களில் மீறும் செயல்களில் சில உறுப்பு நாடுகள் ஈடுபடுகின்றன.  அதனை கவுன்சில் பிரதிபலிக்கவில்லை.

இதுபற்றி நாம் பேச வேண்டிய தேவை உள்ளது என கூறிய ராப், சீனா மீது தாக்கி பேசினார்.  ஜின்ஜியாங்கில் மனித உரிமை நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.  உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது சீனாவின் மனித உரிமை மீறல்கள் பற்றி நாள்தோறும் நமக்கு தகவல்கள் கிடைக்கின்றன.

இந்த சான்றுகளை எவராலும் தவிர்த்து விட முடியாது.  துன்புறுத்துதல், கட்டாய தொழிலில் ஈடுபடுத்துதல் மற்றும் பெண்களுக்கு கட்டாயப்படுத்தி ஊசி செலுத்துதல் உள்ளிட்ட துன்புறுத்தல்கள் தொடர்ந்து வருகின்றன.  இதுபற்றி ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு பேச  வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Next Story