உலக செய்திகள்

ஓமனில் ஒரே நாளில் 330 பேருக்கு கொரோனா 3 பேர் பலி + "||" + Corona for 330 people in a single day in Oman

ஓமனில் ஒரே நாளில் 330 பேருக்கு கொரோனா 3 பேர் பலி

ஓமனில் ஒரே நாளில் 330 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 330 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஸ்கட்,

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 330 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 195 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 848 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 94 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று மட்டும் 3 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,555 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 59 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.22 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.77 கோடியாக உயர்ந்துள்ளது.
2. மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா
மராட்டிய மந்திரி சகன் புஜ்பாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் பாதிக்கப்பட்ட 7-வது மந்திரி இவர் ஆவார்.
3. மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
4. கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்
5. கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை
கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: சார்ஜாவில் ஹைபர் மார்க்கெட், சலூன் கடைக்கு சீல் பொருளாதார மேம்பாட்டுத்துறை நடவடிக்கை.