இந்திய பிரதமர் மோடியின் உருவத்தை சிறப்பாக வரைந்த இந்திய சிறுவனுக்கு பாராட்டு

இந்திய பிரதமர் மோடியின் உருவத்தை சிறப்பாக வரைந்த இந்திய சிறுவனுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 23 Feb 2021 10:14 AM GMT (Updated: 23 Feb 2021 10:14 AM GMT)

துபாயில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் கேரளாவைச் சேர்ந்த சரண் சசிகுமார் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி இந்திய பிரதமரின் உருவத்தை ஓவியமாக வரைந்தார். இந்த படமானது 90 செமீ x 60 செமீ அளவு கொண்டது.

துபாய்,

இந்த படத்தை கடந்த மாதம் துபாய் வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறையின் துணை மந்திரி வி. முரளீதரனிடம் நேரடியாக வழங்கினார். அந்த படத்தை இந்திய பிரதமரிடம் வழங்கவும் அந்த மாணவர் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து அந்த படத்தை மந்திரி பிரதமரிடம் வழங்கினார்.

இதனைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி தன்னை ஓவியமாக வரைந்த சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் அந்த சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்து அந்த சிறுவனின் தந்தைக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஈ மெயில் மூலம் கடிதம் வந்தது.

இந்த கடிதத்தை பெற்றுக் கொண்டதும் சரண் சசிகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து அந்த மாணவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘‘பிரதமரின் வாழ்த்து கடிதம் தனக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

Next Story