அமீரகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,105 ஆக குறைந்தது 3,355 பேர் குணமடைந்தனர்


அமீரகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,105 ஆக குறைந்தது 3,355 பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 23 Feb 2021 10:16 AM GMT (Updated: 23 Feb 2021 10:16 AM GMT)

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரத்து 430 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அபுதாபி,

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 56 ஆயிரத்து 430 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 105 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 72 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 355 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 15 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,140 ஆக உயர்ந்துள்ளது.

அமீரகத்தில் தற்போது 8 ஆயிரத்து 338 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அமீரகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story