நேபாளத்தில் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது: நேபாள உச்ச நீதிமன்றம்


நேபாளத்தில் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது: நேபாள உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 23 Feb 2021 2:15 PM GMT (Updated: 23 Feb 2021 2:15 PM GMT)

நேபாளத்தில் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர் பிரசண்டாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், கட்சியில் பிரதமருக்கான ஆதரவு குறைந்தது. 

இதையடுத்து, நேபாள பாராளுமன்றத்தை கலைத்து கேபி சர்மா ஒலி நடவடிக்கை எடுத்தார். ஆனால்,  கேபி சர்மா ஒலி பாராளுமன்றத்தை கலைத்தது அரசியல் அமைப்புக்கு எதிரானது அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் 13-க்கும் மேற்பட்ட ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று மனு மீது தீர்ப்பு வழங்கியது. 

அதில் ‘‘நாடாளுமன்ற கலைப்பு செல்லாது. கடந்த டிசம்பர் மாதம் 20-ந்தேதி நாடாளுமன்ற கலைப்பிற்குப்பின் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் செல்லாது. நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு மீண்டும் பதவி வழங்கி இன்னும் 13 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவானது காபந்து பிரதமர் கேபி சர்மா ஒலிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 


Next Story