உலக செய்திகள்

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பாக். பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு + "||" + Imran khan in srilanka on his two day visit

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பாக். பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் பாக். பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு
இலங்கை பிரதமர் ராஜபக்சேவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்துப் பேசினார்.
கொழும்பு,

இரண்டு நாள்கள்  அரசு முறைப்பயணமாக இலங்கைக்கு முதல் முறையாக  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், சென்றுள்ளார்.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் அவரின் அமைச்சரவை சகாக்கள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி, தொழிலதிபர்கள் உள்ளிட்டோர்  சென்றுள்ளனர். 

இலங்கை சென்ற இம்ரான் கான்,  அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

பாகிஸ்தான்  அமைச்சர்  ஷா மெகமூத் குரேஷி,   உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையின் போது உடன் இருந்தனர்.  பேச்சுவார்த்தைக்கு பின்  பின்னர் இரண்டு நாடுகளின் பிரதமர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர்.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  நாளை  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்திக்க உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இம்ரான்கான் கஞ்சா - கோகைன் போதைப்பொருளை பயன்படுத்துவார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி தகவல்
இம்ரான் கான் என் வீட்டில் கஞ்சா புகைத்தார், மேலும் கோகைன் சாப்பிட்டு குறட்டை விட்டார் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டு உள்ளார்.
2. இலங்கையில் அதிபருக்கு மீண்டும் கூடுதல் அதிகாரம்
இலங்கையில் அதிபருக்கு மீண்டும் அதிக அதிகாரம் வழங்கப்படுகிறது. இதற்கான அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேறியது.
3. பொம்மை ஆட்சி என்பதா? நவாஸ் ஷெரீப் மீது பாக். பிரதமர் இம்ரான் கான் பாய்ச்சல்
இம்ரான்கான் ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய அளவில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், மக்கள் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
4. பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அக்டோபர் 16 ம் தேதி முதல் மெகா பேரணியை நடத்த பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் திட்டம்
பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அக்டோபர் 16 ம் தேதி முதல் மெகா பேரணியை நடத்த பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
5. பாகிஸ்தான் கேட்ட உதவியை செய்ய மறுத்த ஜெர்மனி, மூக்குடைபட்ட இம்ரான்கான்
பாகிஸ்தான் தனது நீர்மூழ்கிக் கப்பல்களில் பொருத்துவதற்காக ஒரு ’பயங்கர’ கருவியை ஜெர்மனியிடம் கேட்க, கொடுக்க முடியாது என மறுத்துவிட்டது ஜெர்மனி!