உலக செய்திகள்

இந்தியா, இங்கிலாந்திடம் இருந்து இலங்கை 1.35 கோடி கொரோனா தடுப்பூசி வாங்குகிறது + "||" + Sri Lanka buys 1.35 crore corona vaccine from India and UK

இந்தியா, இங்கிலாந்திடம் இருந்து இலங்கை 1.35 கோடி கொரோனா தடுப்பூசி வாங்குகிறது

இந்தியா, இங்கிலாந்திடம் இருந்து இலங்கை 1.35 கோடி கொரோனா தடுப்பூசி வாங்குகிறது
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாக திகழும் இலங்கை, அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறது.
ஏற்கனவே புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்களை அந்த நாட்டுக்கு இந்தியா அன்பளிப்பாக தந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை தோட்டத்துறை மந்திரி ரமேஷ் பதிரானா கூறுகையில், “சீனா மற்றும் ரஷியாவின் தடுப்பூசிகள் இன்னும் தயாராகவில்லை. எனவே 2-வது கட்ட தடுப்பூசி போடுவதற்கு இலங்கை அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகளை வாங்கும்” என குறிப்பிட்டார்.

முதல்கட்ட தடுப்பூசி போடும் பணிக்காக இலங்கை அரசு, இந்திய சீரம் நிறுவனத்திடம் 1 கோடி டோஸ் தடுப்பூசிக்கு ஆர்டர் செய்துள்ளது. இந்த நிலையில் மேலும் 35 லட்சம் தடுப்பூசிக்கு இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்திடம் இலங்கை அரசு ஆர்டர் செய்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியா, உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நாடாக திகழ்வதும், கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவை உலகின் பல நாடுகள் நாடி இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரம்: அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் இயல்பு நிலை திரும்பும்; ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருவதால் அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் இயல்பு நிலை திரும்பும் என ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2. கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
3. மாலத்தீவுகளுக்கு மேலும் 1 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கியது இந்தியா
மாலத்தீவுகளுக்கு கூடுதலாக மேலும் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.
4. காரில் இருந்தவாறே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வசதி: அபுதாபி சுகாதாரத்துறை ஏற்பாடு
காரில் இருந்தவாறே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புதிய வசதியை அபுதாபி சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
5. பாங்கோங் ஏரிக்கரை பகுதிகளில் படைகள் வாபஸ்: இந்தியா, சீனா மீண்டும் பேச்சுவார்த்தை
பாங்கோங் ஏரிக்கரை பகுதிகளில் இருந்து படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்தியா, சீனா ராணுவ தளபதிகள் இன்று 10-வது சுற்று பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.