ஜோ பைடனின் பட்ஜெட் வேட்பாளரான நீரா தாண்டன் நியமனத்திற்கு மேலும் 2 எம்.பிக்கள் எதிர்ப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Feb 2021 12:22 AM GMT (Updated: 24 Feb 2021 12:22 AM GMT)

ஜோ பைடனின் பட்ஜெட் வேட்பாளரான நீரா தாண்டன் நியமனத்திற்கு மேலும் 2 எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் சில முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை தேர்வு செய்தார். அந்த வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான மேலாண்மை மற்றும் நிதி குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை நியமிக்க ஜோ பைடன் முடிவு செய்தார். இவரது நியமனத்துக்கு செனட் சபையின் ஒப்புதல் அவசியம் ஆகும். 

இந்த சுழலில் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் மேலாண்மை இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீரா தாண்டனை நியமிப்பதற்கு குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் சபை எம்.பி. ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். 

இந்நிலையில் பட்ஜெட் மற்றும் மேலாண்மை குழுவின் இயக்குனராக இந்திய வம்சாவளி பெண் நீரா தாண்டனை நியமிப்பதற்கு மேலும் 2 குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் செனட் சபையில் அவரது நியமனத்துக்கு ஒப்புதல் கிடைப்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. 

சமூக வலைதளங்களில் அவா் சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளதால், அவரது நியமனத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே நீரா தாண்டன் தனது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய டுவிட்டர் பதிவுகளை நீக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story