உக்ரைனில் அதிபர் அலுவலகம் அருகே மோதல்; காவல் அதிகாரிகள் 27 பேர் காயம்


உக்ரைனில் அதிபர் அலுவலகம் அருகே மோதல்; காவல் அதிகாரிகள் 27 பேர் காயம்
x
தினத்தந்தி 24 Feb 2021 1:07 AM GMT (Updated: 24 Feb 2021 1:07 AM GMT)

உக்ரைன் நாட்டில் அதிபர் அலுவலகம் அருகே நடந்த மோதலில் காவல் அதிகாரிகள் 27 பேர் காயமடைந்தனர்.

கீவ்,

உக்ரைன் நாட்டில் வலது பிரிவு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் முன்னாள் தலைவராக இருந்தவர் செர்ஹி ஸ்டெர்னென்கோ.  இந்த அமைப்பு ரஷ்யாவால் தடை செய்யப்பட்டு உள்ளது.  ஸ்டெர்னென்கோ ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என்பதற்காக அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் அதிபர் அலுவலகம் அருகே நேற்று ஸ்டெர்னென்கோவின் ஆதரவாளர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.  அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர்.

ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.  தொடர்ந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.  இதில், தேசிய பாதுகாப்பு படை மற்றும் போலீசார் என 27 பேர் காயமடைந்தனர்.

Next Story