உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.26 கோடியாக உயர்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Feb 2021 1:29 AM GMT (Updated: 24 Feb 2021 1:29 AM GMT)

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.82 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் இன்னும் குறையவில்லை.   

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.26 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,26,36,117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,82,23,614 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24 லட்சத்து 95 ஆயிரத்து 281 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,19,17,222 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 92,192 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 2,88,96,669, உயிரிழப்பு -  5,14,958, குணமடைந்தோர் - 1,92,12,300
இந்தியா   -   பாதிப்பு- 1,10,29,326, உயிரிழப்பு -  1,56,598, குணமடைந்தோர் -  1,07,24,144
பிரேசில்   -   பாதிப்பு -1,02,60,621, உயிரிழப்பு -  2,48,646, குணமடைந்தோர் -   92,15,164
ரஷ்யா    -   பாதிப்பு - 41,89,153, உயிரிழப்பு -    84,047, குணமடைந்தோர் -   37,39,344
இங்கிலாந்து - பாதிப்பு - 41,34,639, உயிரிழப்பு -   1,21,305, குணமடைந்தோர் -   26,06,999

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

பிரான்ஸ்    - 36,29,891
ஸ்பெயின்   - 31,61,432
இத்தாலி    - 28,32,162
துருக்கி     - 26,55,633
ஜெர்மனி    - 24,05,263
கொலம்பியா - 22,33,589
அர்ஜெண்டினா- 20,77,228
மெக்சிக்கோ  - 20,43,632
போலந்து    - 16,48,962
ஈரான்       - 15,90,605


Next Story