உலக செய்திகள்

புதிதாக 297 பேருக்கு தொற்று ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலி + "||" + Newly infected 297 people die of coronavirus 2 in a single day in Oman

புதிதாக 297 பேருக்கு தொற்று ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

புதிதாக 297 பேருக்கு தொற்று ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
புதிதாக 297 பேருக்கு தொற்று ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலி.

மஸ்கட்,

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 297 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 295 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் ஓமனில் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 143 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 94 சதவீதமாக இருந்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று 2 பேர் பலியானார்கள். இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,557 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 64 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வாலிபர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 179 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
2. சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி உதவி பேராசிரியர் பலி
புன்னம்சத்திரம் அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி உதவி பேராசிரியர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. மும்பையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா; இன்று 8,217 பேருக்கு தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் இன்று ஒரே நாளில் 8,217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா பிடியில் இருந்து தப்ப வங்கிகளின் பணி நேரத்தை குறைக்க வேண்டும்; வங்கி பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
வங்கி ஊழியர்கள் கொரோனா பிடியில் இருந்து தப்ப வங்கிகளின் பணி நேரத்தையும், பணி நாட்களையும் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வங்கி பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
5. ஓமனில், கொரோனாவுக்கு 9 பேர் பலி
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 1,269 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.