காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும்: இம்ரான் கான் சொல்கிறார்


காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும்: இம்ரான் கான் சொல்கிறார்
x
தினத்தந்தி 24 Feb 2021 3:20 PM GMT (Updated: 24 Feb 2021 3:20 PM GMT)

காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்க்க முடியும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லமாபாத்,

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான், அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இம்ரான், இன்று இலங்கை - பாகிஸ்தான் வர்த்தக முதலீடு மாநாட்டிலும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய இம்ரான் கான் கூறியதாவது:- 

எங்களுடைய ஒரே பிரச்சனை காஷ்மீர்தான். இதை பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்க்க முடியும். நான் ஆட்சிக்கு வந்த பின்னர், உடனடியாக அண்டை நாடான இந்தியாவின் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு, நம்முடைய வேறுபட்ட கருத்துக்களை பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க முடியும். அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினேன். நான் அதில் வெற்றி பெறவில்லை, ஆனால் இறுதியில் உணர்வு மேலோங்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்


Next Story