கார்ட்டூன் பெண் கதாப்பாத்திரங்களுக்கும் 'ஹிஜாப்' கட்டாயம் - ஈரான் அரசு உத்தரவு!


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 24 Feb 2021 3:44 PM GMT (Updated: 24 Feb 2021 3:44 PM GMT)

கார்ட்டூன் பெண் கதாப்பாத்திரங்களுக்கும் 'ஹிஜாப்' கட்டாயம் - என ஈரான்அரசு உத்தரவிட்டு உள்ளது.

தெஹ்ரான்

ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்நாட்டின் தலைவராக இருக்கும் அயதுல்லா அலி கமேனி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் கார்ட்டூன் பெண் கதாப்பாத்திரங்களுக்கும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் இது குறித்து விளக்கமளித்த அவர், நாட்டில் இருக்கும் இளம் தலைமுறையினரிடையே ஹிஜாப் அணியும் பழக்கம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார். கற்பனை கதாப்பாத்திரங்களுக்கு ஹிஜாப் தேவையில்லை என்றாலும், இஸ்லாமிய முறையை இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஈரானைப் பொறுத்தவரையில் பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணியாமல் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். அவர்களிடம் அபராதம் வசூலிக்கும் காவல்துறையினர் ஒருசில நேரங்களில் கைது செய்து சிறையிலும் அடைத்துவிடும் நிலை தற்போதும் நடைமுறையில் உள்ளது.

அயதுல்லா அலி கமேனியின் இந்த புதிய உத்தரவு அந்நாட்டில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 

Next Story