இந்தியாவில் இருந்து கூடுதல் தடுப்பூசி; சீரம் நிறுவனத்துடன் கனடா பேச்சு


இந்தியாவில் இருந்து கூடுதல் தடுப்பூசி; சீரம் நிறுவனத்துடன் கனடா பேச்சு
x
தினத்தந்தி 24 Feb 2021 10:47 PM GMT (Updated: 24 Feb 2021 10:47 PM GMT)

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவிடம் இருந்து 2 கோடி டோஸ் வாங்குவதற்கு கனடா ஏற்கனவே ஆர்டர் கொடுத்துள்ளது.

இந்த தடுப்பூசிகளை புனேயில் உள்ள இந்திய சீரம் மருந்து நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்கி வருகிறது. இந்த கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு, இந்திய சீரம் நிறுவனத்துடன் கனடா பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக அந்த நாட்டின் கொள்முதல் துறை மந்திரி அனிதா ஆனந்த் தெரிவித்தார்.

பல்வேறு தடுப்பூசிகளை வாங்குவதற்கு கனடாவின் ட்ரூடோ அரசு ஒப்பந்தங்களை செய்து வந்த போதும், தடுப்பூசி போடும் திட்டத்தை நிறுத்தி வைத்ததால் அது தோல்வி அடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகளும், கனடா மக்களும் விமர்சிக்கின்றனர்.

Next Story