உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Feb 2021 1:30 AM GMT (Updated: 25 Feb 2021 1:30 AM GMT)

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8.86 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இங்கிலாந்தில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ், உலக நாடுகளுக்கிடையே அச்சத்தை உருவாக்கியது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.30 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,30,81,640 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,86,98,691 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 லட்சத்து 06 ஆயிரத்து 752 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,18,76,197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91,856 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 2,89,74,124, உயிரிழப்பு -  5,17,408, குணமடைந்தோர் - 1,93,40,318
இந்தியா   -   பாதிப்பு- 1,10,46,432, உயிரிழப்பு -  1,56,742, குணமடைந்தோர் -  1,07,36,433
பிரேசில்   -   பாதிப்பு -1,03,26,008, உயிரிழப்பு -  2,50,079, குணமடைந்தோர் -   92,81,018
ரஷ்யா    -   பாதிப்பு - 42,00,902, உயிரிழப்பு -    84,430, குணமடைந்தோர் -   37,51,562
இங்கிலாந்து - பாதிப்பு - 41,44,577, உயிரிழப்பு -   1,21,747, குணமடைந்தோர் -   26,66,466

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

பிரான்ஸ்    - 36,61,410
ஸ்பெயின்   - 31,70,644
இத்தாலி    - 28,48,564
துருக்கி     - 26,65,194
ஜெர்மனி    - 24,16,029
கொலம்பியா - 22,37,542
அர்ஜெண்டினா- 20,80,824
மெக்சிக்கோ  - 20,52,266
போலந்து    - 16,61,109
ஈரான்       - 15,98,875

Next Story