இத்தாலியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,886 பேருக்கு தொற்று உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Feb 2021 6:21 PM GMT (Updated: 25 Feb 2021 6:21 PM GMT)

இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28.68 லட்சத்தை கடந்தது.

ரோம்,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 8-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,886 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்து 68 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பால் மேலும் 308 பேர் உயிரிழந்தநிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 96 ஆயிரத்து 974 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,75,318 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக 3,96,143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story