உலக செய்திகள்

சீனா வறுமையை முற்றிலும் ஒழித்து விட்டது; அதிபர் ஜின்பிங் அறிவிப்பு + "||" + President Xi Jinping declares complete victory in eradicating poverty in China

சீனா வறுமையை முற்றிலும் ஒழித்து விட்டது; அதிபர் ஜின்பிங் அறிவிப்பு

சீனா வறுமையை முற்றிலும் ஒழித்து விட்டது; அதிபர் ஜின்பிங் அறிவிப்பு
சீனா வறுமையை முற்றிலும் ஒழிப்பதில் வெற்றி கண்டு விட்டது என்று அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் அறிவித்துள்ளார்.
வறுமை ஒழிப்பு விழா
உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக சீனா விளங்குகிறது. அந்த நாட்டில் சுமார் 140 கோடிப்பேர் வாழ்கின்றனர். அங்கு வறுமை ஒழிப்பில் நாட்டின் சாதனைகளை குறிக்கும் வகையிலும், வறுமை ஒழிப்பில் போராடியவர்களை கவுரவிக்கும் வகையிலும் பீஜிங்கில் ஒரு விழா நடத்தப்பட்டது.

‘வறுமை ஒழிக்கப்பட்டு விட்டது’

இந்த விழாவில் அதிபர் ஜின்பிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சீனாவில் கிராமப்புறங்களில் வாழ்ந்து வந்த அனைத்து ஏழை மக்களும் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். இதன்மூலம் 2030-ம் ஆண்டுக்குள் சீனா வறுமையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. சபை நிர்ணயித்திருந்த காலக்கெடுவை விட 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வறுமை ஒழிக்கப்பட்டு விட்டது. 832 வறிய மாவட்டங்களும், 1 லட்சத்து 28 ஆயிரம் வறிய கிராமங்களும் வறுமை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.

அதிசயம்
1970-களின் பிற்பகுதியில் சீர்திருத்தம் தொடங்கப்பட்டு, திறக்கப்பட்டதில் இருந்து 77 கோடி வறிய கிராமப்புற மக்கள் சீனாவின் தற்போதைய வறுமைக்கோட்டின் கணக்கெடுப்பில், வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என பதிவாகி இருக்கிறது. இந்த கால கட்டத்தில் உலகளாவிய வறுமை ஒழிப்பில் சீனா 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பை செய்துள்ளது. இந்த சாதனைகள் மூலம் சீனா மற்றொரு அதிசயத்தை உருவாக்கி இருக்கிறது. அது வரலாற்றில் எழுதப்படும்.

வறுமை ஒழிப்புக்கு முதலீடு
நான் சீன அதிபர் பதவிக்கு வந்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளில் சீனா வறுமை ஒழிப்புக்காக கிட்டத்தட்ட 246 பில்லியன் டாலர் நிதியை (சுமார் ரூ.17 லட்சத்து 95 ஆயிரத்து 800 கோடி) முதலீடு செய்துள்ளது.

உலக வங்கியின் சர்வதேச வறுமைக்கோட்டின்படி, கடந்த 40 ஆண்டுகளில் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்ட சீன மக்களின் எண்ணிக்கை, உலகளாவிய மொத்தத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. வறுமையை ஒழிப்பது கடைசிப்புள்ளி அல்ல. புதிய வாழ்க்கை மற்றும் புதிய முயற்சிதான் தொடக்கப்புள்ளி. சீன கம்யூனிஸ்டு கட்சி உருவாக்கப்பட்ட காலம் தொட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பாடுபட்டு வந்துள்ளது. 2012-ம் ஆண்டு நான் அதிகாரத்துக்கு வந்தது முதல் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடிக்கு மேற்பட்டோர் வறுமையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

கிராமப்புற வாழ்க்கையை மேம்படுத்துவது முக்கியம்...
2012-ம் ஆண்டில் இருந்து இதுவரை 79 லட்சம் வீடுகளில் வாழ்ந்து வந்த 2 கோடியே 56 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாழடைந்துபோன தங்கள் வீடுகளை புதுப்பித்துள்ளனர். இதே காலகட்டத்தில் வறிய பகுதிகளில் இருந்து 96 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். 28 இன சிறுபான்மை குழுக்கள் 2012-ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து மொத்தமாக வறுமையில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். இந்த ஆண்டுக்குள், கிராமப்புறங்களில் வாழ்க்கையை மேம்படுத்துவது, மிதமான வளமான சமுதாயத்தை கட்டியெழுப்ப வெற்றியை பெறுவதற்கு முக்கியம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.82- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.82- கோடியாக உயர்ந்துள்ளது.
2. மியான்மரின் ஆயுதப்படை தினமான இன்று ஒரே நாளில் போராட்டக்காரர்கள் 91 பேர் சுட்டுக்கொலை
மியான்மரின் ஆயுதப்படை தினமான இன்று ஒரே நாளில் போராட்டக்காரர்கள் 91 பேர் சுட்டுக்கொலை செய்ய்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
3. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 33 சதவீதம் குறைந்துள்ளது
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 33 சதவீதம் குறைந்திருந்தாலும் உலகிலேயே அதிக ஆயுதம் இறக்குமதி செய்யும் 2வது நாடு என்ற பெயரைப் பெற்றுள்ளது.
4. சீனா நிறுவனங்கள் மீது தாக்குதல்: மியான்மரில் 6 நகரங்களில் ராணுவ சட்டம் அமல் நேற்றைய வன்முறையில் 20 பேர் பலி
சீனா நிறுவனங்கள் மீது தாக்குதல்: மியான்மரில் 6 நகரங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் யங்கூன் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
5. நிலவின் மேற்பரப்பில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்: சீனா - ரஷ்யா கூட்டாக அறிவிப்பு
நிலவின் மேற்பரப்பில் சீனா - ரஷ்ய நாடுகளின் கூட்டு முயற்சியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது.