உலக செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது; அமெரிக்கா அறிவிப்பு + "||" + Johnson and Johnson-made single-dose corona vaccine is safe: United States

ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது; அமெரிக்கா அறிவிப்பு

ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது; அமெரிக்கா அறிவிப்பு
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒற்றை டோஸ் தடுப்பூசி

இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் உள்பட தற்போது பயன்பாட்டில் இருக்கிற தடுப்பூசிகள் அனைத்தும் இரட்டை டோஸ் தடுப்பூசிகளாகவே உள்ளன.முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 2 டோஸ் தடுப்பூசி போட்டு சிறிது காலத்துக்கு பின்னர்தான் கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு பொருள் உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தார், கொரோனாவுக்கு எதிராக ஒற்றை டோஸ் தடுப்பூசியை உருவாக்கி உள்னனர். இதன் மருத்துவ பரிசோதனையில், கொரோனாவுக்கு எதிராக இது மிகவும் பயனுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா அறிவிப்பு

இந்த ஒற்றை டோஸ் தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என்று அமெரிக்க உணவுமற்றும் மருந்து நிர்வாகம்எப்.டி.ஏ. அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் அடுத்த சில நாட்களில் இந்த தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.ஏற்கனவே அங்கு பைசர், மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவ்விரு தடுப்பூசிகளை விட ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி விலை குறைவானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.மேலும் இந்த தடுப்பூசியை பிரிஜ்ஜில் வைத்து பாதுகாத்துக்கொள்ள முடியுமாம்.

கடுமையான நோயை தடுப்பதில் இந்த தடுப்பூசி 85 சதவீதத்துக்கும் மேலாக பலன் அளிக்கும் என தரவுகள் கூறுகின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக 66 சதவீதம் பலன் அளிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

2 கோடி டோஸ் வினியோகம்

இந்த தடுப்பூசி பற்றி வாஷிங்டன் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், அடுத்த வாரம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 30 லட்சம் டோஸ் தடுப்பூசியை விடுவிக்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறினார். மேலும் இந்த தடுப்பூசி எப்.டி.ஏ.விடம் இருந்து அவசர கால பயன்பாட்டு அனுமதியை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.வரும் மார்ச் மாத இறுதிக்குள் 2 கோடி டோஸ் தடுப்பூசிகளை வினியோகிக்க முடியும் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் கூறுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பஹ்ரைன்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மசூதிகளில் அனுமதி
பஹ்ரைனில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மசூதிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஈரானுடனான மறைமுக பேச்சுவார்த்தை: வியன்னாவில் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் - அமெரிக்க வெளியுறவு அமைச்சகம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தை, வியன்னாவில் அடுத்த வாரம் மீண்டும் தொடங்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. கொரோனா 2-வது அலை பரவுகிறது- போராட்டத்தை விவசாயிகள் ஒத்திவைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 135 நாள்களாக டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
4. 'ஜகமே தந்திரம்’ பட நாயகிக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள்.
5. காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.