உலக செய்திகள்

அமீரகம் ஒரு நாடல்ல; உலகமாக திகழ்ந்து வருகிறது துணை அதிபர் டுவிட்டரில் தகவல் + "||" + The United States is not a nation;

அமீரகம் ஒரு நாடல்ல; உலகமாக திகழ்ந்து வருகிறது துணை அதிபர் டுவிட்டரில் தகவல்

அமீரகம் ஒரு நாடல்ல; உலகமாக திகழ்ந்து வருகிறது துணை அதிபர் டுவிட்டரில் தகவல்
அமீரகம் உலகில் ஒரு நாடல்ல. மாறாக நாட்டில் ஒரு உலகமாக திகழ்ந்து வருகிறது என்று அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

துபாய்,

அமீரகம் உலகில் ஒரு நாடல்ல. மாறாக நாட்டில் ஒரு உலகமாக திகழ்ந்து வருகிறது என்று அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மென்மையான சக்தி குறியீடு

உலகளாவிய அளவில் மென்மையான சக்தி குறியீட்டை பயன்படுத்தும் நாடுகள் குறித்து தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய அரபு அமீரகம் பிராந்திய அளவில் முதலிடத்தையும், சர்வதேச அளவில் 17-வது இடத்தையும் வகிக்கிறது. இந்த கருத்துக் கணிப்பானது 105 நாடுகளைச் சேர்ந்த 77 ஆயிரம் பேர் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த குறியீடானது கணினி உள்ளிட்டவற்றை அரசுத்துறைகளில் பயன்படுத்தி பொதுமக்களுக்கு விரைவான சேவையை ஸ்மார்ட் முறைகளில் வழங்கப்படுவது ஆகும். இந்த தரவரிசையானது கடந்த ஆண்டு இருந்ததைவிட ஐக்கிய அரபு அமீரகம் மென்மையான சக்தி குறியீட்டை பயன்படுத்தும் நாடுகளில் மேலும் முன்னிலை பெற்றுள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா உள்ளிட்ட பாதிப்புகளை அமீரகம் உலக நாடுகளில் சிறப்பாக கையாண்ட நாடுகளில் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் அமீரகத்தில் வசித்த போது அவர்கள் சொந்த ஊருக்கு செல்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அமீரகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

குறிப்பாக மருத்துவ சிகிச்சை, விமான சேவை என இந்த சேவையானது விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பை கையாண்ட சிறப்பான நாடுகளில் உலகில் முதல் 15-வது இடத்தை பெற்றுள்ளது.

இணைப்பு பாலமாக செயல்படும்

மேலும் ஐக்கிய அரபு அமீரகம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஊடக நிறுவனங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இது தற்போது 9-வது இடத்தை வகிக்கிறது. கடந்த ஆண்டை விட இது மேலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் உலகின் முதல் 10 நாடுகளை அமீரகம் பெற்றுள்ளது.

இத்தகைய சிறப்புகள் மூலம் உலக நாடுகளுக்கு நாம் சொல்ல விரும்புவது, அனைத்து நாடுகளைச் சேர்ந்த மக்களுடன் இணைப்பு பாலமாக அமீரகம் தொடர்ந்து செயல்படும். இதன் மூலம் ஒவ்வொருவருடனும் இணக்கமான தொடர்பை அமீரகம் கொண்டிருக்கும்.

மேலும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த கலாசார சந்திப்பின் கேந்திரமாக அமீரகம் திகழும். ஏனென்றால் ஐக்கிய அரபு அமீரகம் உலகில் ஒரு நாடல்ல. மாறாக நாட்டில் ஒரு உலகமாக அமீரகம் திகழ்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல் எதிரொலி: கோவில்களில் பக்தர்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்
கொரோனா பரவல் எதிரொலியாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நாளை (சனிக்கிழமை) முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
2. முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்
முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்.
3. முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்
முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்.
4. சட்டமன்ற தேர்தல் 11 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் கலெக்டர் தகவல்
சட்டமன்ற தேர்தலையொட்டி 11 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
5. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோரிடம் இருந்து 1,593 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்டோரிடம் இருந்து 1,593 தபால் வாக்குகளும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இருந்து 363 தபால் வாக்குகளும் பெறப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.