உலக செய்திகள்

பிரிட்டனில் மேலும் 8,523- பேருக்கு கொரோனா + "||" + UK records another 8,523 coronavirus cases, 345 deaths

பிரிட்டனில் மேலும் 8,523- பேருக்கு கொரோனா

பிரிட்டனில் மேலும் 8,523- பேருக்கு கொரோனா
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,523- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டன்,

பிரிட்டனை உலுக்கி எடுத்து வரும் உருமாறிய கொரோனா பாதிப்பு , இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், தொற்று பாதிப்பும்  கணிசமாக பரவி வருகிறது. பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,523- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியுள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 345- பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,22,415- ஆகும். பிரிட்டனில் இதுவரை 19.1 மில்லியன் பேருக்கு தடுப்பூசியின் முதல் தொகுப்பு போடப்பட்டுள்ளது.  பிரிட்டனில் தற்போது கொரோனா அச்சம் காரணமாக 3-வது கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா 2-வது அலை பரவுகிறது- போராட்டத்தை விவசாயிகள் ஒத்திவைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 135 நாள்களாக டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
2. 'ஜகமே தந்திரம்’ பட நாயகிக்கு கொரோனா
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள்.
3. காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
4. கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி: செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த காய்கறி வியாபார கடைகளில் சில்லரை விற்பனைக்கு தடை
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேற்று நிருபர்களை சந்தித்து பேசினார்.
5. கொரோனா கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை எனில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் -தமிழக அரசு எச்சரிக்கை
கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று தமிழ அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.