வங்கதேசத்தில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 8,400- ஆக உயர்வு


வங்கதேசத்தில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 8,400- ஆக உயர்வு
x
தினத்தந்தி 27 Feb 2021 9:39 PM GMT (Updated: 27 Feb 2021 9:39 PM GMT)

வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 8,400- ஆக உயர்ந்துள்ளது.

டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கொரோனா  பலி எண்ணிக்கை 8,400ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், வங்கதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 12,348 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அவர்களில் புதிதாக 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,45,831ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவுக்கு இன்று மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 8,400ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 609 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,96,107ஆக உயர்ந்துள்ளது. 

Next Story