உலக செய்திகள்

அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய குட்டி விமானம் 3 பேர் பலி + "||" + A small plane crashes in a residential area in the United States

அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய குட்டி விமானம் 3 பேர் பலி

அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொருங்கிய குட்டி விமானம் 3 பேர் பலி
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட குட்டி விமானம் ஒன்று புறப்பட்டது.‌

நியூயார்க்,

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட குட்டி விமானம் ஒன்று புறப்பட்டது.‌

புளோரிடா மாகாணத்தின் டேடோனா கடற்கரை நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தில் விமானி உட்பட 3 பேர் பயணம் செய்தனர்.‌

கெயின்ஸ்வில்லே விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானி விமான நிலையம் அருகேயுள்ள சாலையில் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார்.‌ ஆனால் அவரது கட்டுக்குள் வராத விமானம் விமான நிலையத்தையொட்டிய குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.‌

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.‌

 


தொடர்புடைய செய்திகள்

1. வாலிபர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
கடலூர் மாவட்டத்தில் புதிதாக 179 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
2. சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி உதவி பேராசிரியர் பலி
புன்னம்சத்திரம் அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி உதவி பேராசிரியர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. ஓமனில், கொரோனாவுக்கு 9 பேர் பலி
ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 1,269 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் (வயது 20) என்ற கருப்பின வாலிபரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து நழுவி காரில் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண் போலீஸ் அதிகாரியான கிம் பாட்டர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
5. ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி எலக்ட்ரீசியன் பலி
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பரத்குமார்.