2024-அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் + "||" + Trump CPAC speech: Former president says he may run again in 2024, in first public address since leaving White House
2024-அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்
அமெரிக்காவில் 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப், ஜனநாயக கட்சியின் ஜோபைடனின் தோல்வியை தழுவினார். தோல்விக்குப் பிறகு முதல் முறையாக பொது மேடையில் பேசிய டிரம்ப், 2024- ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம் என்று கூறினார்.
டிரம்ப் மேலும் கூறுகையில், நாம் தொடங்கிய இந்த சிறப்பான பயணம் முடிவுக்கு வர வெகு தொலைவு உள்ளது. புதிய கட்சியை துவங்குவதில் விருப்பம் இல்லை. பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது நமக்கு தெரியும். ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கபோகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 2024- அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும்” என்றார்.