உலகளவில் 10%க்கு குறைவானோர் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடியை பெற்றுள்ளனர்; உலக சுகாதார அமைப்பு


உலகளவில் 10%க்கு குறைவானோர் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடியை பெற்றுள்ளனர்; உலக சுகாதார அமைப்பு
x
தினத்தந்தி 1 March 2021 2:37 PM GMT (Updated: 1 March 2021 2:37 PM GMT)

உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவானோர் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடியை பெற்றுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஜெனீவா,

உலக அளவில் 11.4 கோடி பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  25 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை கழகத்தின் தகவல் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உண்மையில் உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் குறைவானோர் கொரோனா பாதிப்புக்கு எதிரான ஆன்டிபாடியை பெற்றுள்ளனர்.

அதிக மக்கள் தொகை நெருக்கம் கொண்ட நகர பகுதிகளில் வசிப்போருக்கு 50, 60 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களுக்கு ஆன்டிபாடிகளும் உற்பத்தியாகி உள்ளன என அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் தெரிவித்து உள்ளார்.

Next Story