உலக செய்திகள்

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்! + "||" + Chinese Hackers Target India’s Serum Institute, Bharat Biotech: Report

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
பெய்ஜிங்,

சீனாவின் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டும் ஹேக்கிங் குழு கடந்த வாரம் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான  சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் ஊடுருவ முயற்சித்தது தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி தொடர்பான அறிவுசார் தகவல்களை திருட  சீன ஹேக்கர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  உலக அளவில் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி மையமாக திகழும் இந்தியா, பல நாடுகளுக்கு இலவசமாகவும், வழங்கி வருகிறது.  உலகில் விற்கப்படும் அனைத்து தடுப்பூசிகளிலும் 60% க்கும் அதிகமானவற்றை இந்தியா உற்பத்தி செய்த இந்த தடுப்பூசிகளாகும்.

சீனாவை சேர்ந்த ஹேக்கிங் குழுவான ஏபிடி 10, பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) ஆகியவற்றின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் சாப்ட் வேர்களை வேவு பார்த்ததாக சீங்கப்பூர் மற்றும் ஜப்பானை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து பாரத் பயோடெக் மற்றும் சீரன் இன்ஸ்டிடியூட் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. சீன வெளியுறவுத்துறை அமைச்சகமும் இது குறித்து கருத்து கூறவில்லை


தொடர்புடைய செய்திகள்

1. பஹ்ரைன்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மசூதிகளில் அனுமதி
பஹ்ரைனில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மசூதிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும்
ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
3. மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட முகாம்கள் மூடப்பட்டன
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.
4. முக கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் தெலுங்கான முதல்வர் அறிவிப்பு
தெலங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் முக கவசம் அணியாவிட்டால் 1,000 ருபாய் அபராதம் விதிக்க முதல்வர் சந்திரசேகர்ராவ் உத்தரவிட்டுள்ளார்.
5. நான்கு கோடியே 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து இருப்பில் உள்ளது- மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்
நான்கு கோடியே 30 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து இருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.