உலக செய்திகள்

அணு ஆயுத சோதனையில் சீனா தீவிரம்: அமெரிக்க ஆய்வாளர் தகவல் + "||" + Satellite images suggest China hastening efforts for more survivable nuclear force, expert says

அணு ஆயுத சோதனையில் சீனா தீவிரம்: அமெரிக்க ஆய்வாளர் தகவல்

அணு ஆயுத சோதனையில் சீனா தீவிரம்: அமெரிக்க ஆய்வாளர் தகவல்
அணு ஆயுத சோதனையில் சீனா தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்க ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

 சீனா தனது புதிய அணு ஏவுகணைகளை பூமிக்கு அடியில் இருந்து ஏவுவதற்கான திறனை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகவும், இது அணு ஆயுத தாக்குதலுக்கு உடனடியாக பதிலளிக்கும் திறனை மேம்படுத்தும் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அணுசக்தி கண்காணிப்பு குழு நிபுணர் ஹான்ஸ் கிறிஸ்டென்ஷன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் அணு ஆயுத செயல் திட்டங்களை கண்காணித்து வரும் ஹான்ஸ் கிரிஸ்டென்ஷன், செயற்கைகோள் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்து மேற்கூறிய தகவலை வெளியிட்டுள்ளார் 

மேலும், சீனா அணு ஆயுத தளங்களை நவீனப்படுத்துவதை அறிந்து, அமெரிக்காவும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை மேம்படுத்த உள்ளதாகவும், எனினும் இரு நாடுகளுக்கு இடையே மோதலை நோக்கி செல்வதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு
பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.
2. அமெரிக்காவில் சுற்றுப்பயணம்; ஜனாதிபதி ஜோ பைடனுடன் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா நேரடி பேச்சுவார்த்தை
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
3. அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் (வயது 20) என்ற கருப்பின வாலிபரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து நழுவி காரில் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண் போலீஸ் அதிகாரியான கிம் பாட்டர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
4. அமெரிக்காவில் பள்ளிக்கூடத்துக்குள் துப்பாக்கி சூடு; ஒருவர் சாவு
அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உயர்நிலை பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
5. சீன கப்பல்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவது குறித்து அமெரிக்கா-பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கவலை
சீன கப்பல்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவது குறித்து அமெரிக்கா-பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.