உலக செய்திகள்

சினிமா தியேட்டர், பார், மசாஜ் கிளப் என நவீன வசதிகளுடன் 400 அறைகள் என உருவாகும் விண்வெளி ஓட்டல் + "||" + World's first space HOTEL to begin construction in low Earth orbit in 2025 complete with restaurants, cinemas and rooms for up to 400 guests

சினிமா தியேட்டர், பார், மசாஜ் கிளப் என நவீன வசதிகளுடன் 400 அறைகள் என உருவாகும் விண்வெளி ஓட்டல்

சினிமா தியேட்டர், பார், மசாஜ் கிளப்  என நவீன வசதிகளுடன் 400 அறைகள் என உருவாகும் விண்வெளி ஓட்டல்
சினிமா தியேட்டர், பார், மசாஜ் கிளப் என நவீன வசதிகளுடன்ம் 400 அறைகள் கொண்ட ஓட்டல் ஒன்று விண்வெளியில் உருவாகி வருகிறது.
வாஷிங்டன்

அமெரிக்காவின் ஆர்பிட்டல் அசெம்பளி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் வோயேஜர் ஸ்டேஷனின் ஓட்டலல் கட்டுமானப் பணிகள் வரும் 2025ம் ஆண்டில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குழுவில் நாசா வீரர்கள், விமானிகள், பொறியாளர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள் உள்ளனர், வெவ்வேறு நோக்கங்களுக்காக பல பகுதிகளை  உள்ளடக்கிய ஒரு அமைப்பை உருவாக்குதல் மற்றும் அதிவேக விண்வெளி ரெயில் ஆக இருக்கும்.முழுமையாக சொல்லப்போனால் இது இதுவரை மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பொருளாக இது இருக்கும்.

இந்த 24 ஒருங்கிணைந்த வாழ்விட தொகுதிகள் ஒவ்வொன்றும் 20 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும், மேலும் ஓட்டல் அறைகள் முதல் திரைப்பட அரங்குகள் வரை வேறுபட்ட செயல்பாட்டைக் கொண்டிருக்கும்.

விண்வெளி ஓட்டல்  ஒரு பெரிய வட்டமாக இருக்கும் மற்றும் செயற்கை ஈர்ப்பை உருவாக்க சுழலும், இது சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் ஈர்ப்பு விசைக்கு சமமாக அமைக்கப்படும்.

இந்த ஓட்டலில் தங்கும் அறைகள், சினிமா தியேட்டர், பார், மசாஜ் கிளப் என ஏராளமான வசதிகள் உள்ளன.  ஒரே நேரத்தில் 400 பேர் வரை தங்கும் வசதி கொண்ட இந்த ஓட்டலின் கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.

ஒரு கப்பலில் நீங்கள் பார்க்க விரும்பும் அனைத்தும், ஆனால் இது ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் உலகை சுற்றும் வகையில் இருக்கும் .

பணிகள் நிறைவுற்ற பின் இது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிடம் விற்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 2025ல் கட்டுமானப் பணிகள் முடிந்தாலும் 2027ம் ஆண்டு முதல்தான் மனிதர்கள் செல்லமுடியும் என்று ஆர்பிட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.

ஆனால் கட்டுமானப் பணிகளுக்கான செலவு, மனிதர்கள் தங்கும் செலவு குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. துண்டான தலையில் இருந்து இதயம்,உடலை வளர்க்கும் கடல் அட்டை: விஞ்ஞானிகள் வியப்பு
துண்டான தலையில் இருந்து இதயம்,உடலை வளர்க்கும் கடல் அட்டைகளை பார்த்து விஞ்ஞானிகள் வியப்படைந்தனர்
2. 51 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து வந்த மர்ம ஒலிகள் வேற்றுக்கிரக வாசிகள் அனுப்பியதா..? விஞ்ஞானிகள் ஆய்வு
51 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து வந்த ரேடியோ சமிக்ஞை ஒலிகள் வேற்றுக்கிரக வாசிகள் அனுப்பிய சப்தமா என விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்
3. அழிவின் விளிம்பில் இருக்கும் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்பிரீட் மீன் இனம்
அழிவின் விளிம்பில் இருக்கும் 6.5 கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்பிரீட் மீன் இனத்தை விஞ்ஞானிகள், உயிரியியல் பாதுகாப்பு வல்லுநர்கள் காப்பாற்றிவருகிறார்கள்.
4. 27,000 கி.மீ வேகத்தில் சூரியன்-சந்திரனை கடந்து செல்லும் விண்வெளி நிலையத்தை படம் எடுத்த புகைப்பட கலைஞர்
27,000 கி.மீ வேகத்தில் சூரியன் மற்றும் சந்திரனை கடந்து செல்லும் சர்வதேச விண்வெளி நிலையத்தை புகைப்பட கலைஞர் ஒருவர் படம் எடுத்து உள்ளார்.
5. 21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம்
21 அடி வரை இறக்கைகள் மற்றும் ஹாக்ஸா போன்ற பற்கள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள் எது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.