நோபல் பரிசுக்கு டொனால்டு டிரம்ப்,கிரேட்டா துன்பெர்க் உள்பட 329 பேர் பரிந்துரை


நோபல் பரிசுக்கு டொனால்டு டிரம்ப்,கிரேட்டா துன்பெர்க்  உள்பட 329 பேர் பரிந்துரை
x
தினத்தந்தி 2 March 2021 8:04 AM GMT (Updated: 2 March 2021 8:04 AM GMT)

நோபல் பரிசுக்கு டொனால்டு டிரம்ப்,கிரேட்டா துன்பெர்க் உள்பட 329 பேர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளனர்.

நார்வே

2021ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சுற்று சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டில் 376 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.

உலக அளவில் இயற்பியல், அமைதி, வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

மிக மதிப்பு வாய்ந்த விருதாக கருதப்படும் இந்த விருதுக்குபல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் பரிந்துரைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 329 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபல் விருது  கமிட்டி தெரிவித்துள்ளது

இதில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்று சூழல் ஆர்வலர்  கிரேட்டா துன்பெர்க், ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.

2021 நோபல் பரிசுக்கு 234 தனிநபர்களும், 95 அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நோபல் குழு தனது முடிவை அக்டோபரில் அறிவிக்கிறது. 

Next Story