உலக செய்திகள்

ஓமனில் புதிதாக 361 பேருக்கு கொரோனா 3 பேர் பலி + "||" + Corona for 361 newcomers in Oman

ஓமனில் புதிதாக 361 பேருக்கு கொரோனா 3 பேர் பலி

ஓமனில் புதிதாக 361 பேருக்கு கொரோனா 3 பேர் பலி
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மஸ்கட்,

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 361 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 260 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்குக் திரும்பியுள்ளனர். இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நேற்று மட்டும் 3 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,580 ஆக அதிகரித்துள்ளது. தற்போது உடல்நலக்குறைவால் 70 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கார் மோதி தொழிலாளி பலி
கொட்டாம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்
2. தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் கொரோனா தொற்றால் பாதிப்பு
தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ரமலான் மாதத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு அபுதாபி சுகாதார சேவை நிறுவனம் அறிவிப்பு
ரமலான் மாதத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் வேலை நேரம் நீட்டிப்பு அபுதாபி சுகாதார சேவை நிறுவனம் அறிவிப்பு.
4. புதிதாக 1,399 பேருக்கு கொரோனா ஓமனில் ஒரே நாளில் 12 பேர் பலி
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், நேற்று 1,399 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கொரோனா பயத்தில் படப்பிடிப்புக்கு வரமறுத்த ஜெகபதி பாபு
பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதிபாபு தமிழில் தாண்டவம், புத்தகம், லிங்கா, கத்தி சண்டை, பைரவா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.