உலக செய்திகள்

அமீரகத்தில், ஒரே நாளில் கொரோனாவால் 2,692 பேர் பாதிப்பு + "||" + In the United States, 2,692 people were affected by corona in a single day

அமீரகத்தில், ஒரே நாளில் கொரோனாவால் 2,692 பேர் பாதிப்பு

அமீரகத்தில், ஒரே நாளில் கொரோனாவால் 2,692 பேர் பாதிப்பு
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அபுதாபி,

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 18 ஆயிரத்து 351 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 2 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமீரகத்தில் நேற்றும் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 99 ஆயிரத்து 463 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் ஆயிரத்து 589 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 85 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 16 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,269 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 12 ஆயிரத்து 607 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா பாதிப்படைந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 194 பேருக்கு கொரோனா உறுதி
மதுரையில் புதிதாக 194 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
2. 34 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. மேலும் 55 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம்
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 465 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 465 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.