உலக செய்திகள்

கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறல்: கிரிக்கெட் விளையாடிய 13 பேருக்கு அபராதம் சார்ஜா போலீசார் நடவடிக்கை + "||" + 13 fined for playing cricket

கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறல்: கிரிக்கெட் விளையாடிய 13 பேருக்கு அபராதம் சார்ஜா போலீசார் நடவடிக்கை

கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறல்: கிரிக்கெட் விளையாடிய 13 பேருக்கு அபராதம் சார்ஜா போலீசார் நடவடிக்கை
கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறி கிரிக்கெட் விளையாடிய 13 பேருக்கு அபராதம் சார்ஜா போலீசார் நடவடிக்கை எடுத்தது.

சார்ஜா,

சார்ஜா பகுதியில் ஆங்காங்கே சிலர் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து போலீசார் சார்ஜாவின் பல்வேறு பகுதிகளிலும் ரோந்து பணியை மேற்கொண்டனர். அப்போது சார்ஜாவில் உள்ள மைதானம் ஒன்றில் கிரிக்கெட் விளையாடிய 13 பேர் பிடிபட்டனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. இதனைப் பார்த்த போலீசார் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்ற செயல்பாடுகளால் கொரோனா பாதிப்பு அதிக கூடும் என எச்சரித்தனர். மேலும் கிரிக்கெட்ட விளையாடிய 13 பேருக்கும் அபராதம் விதித்தனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய பேட் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுபோல் தொடர்ந்து பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காமல் விளையாட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மைதானங்களில் வார இறுதி நாட்களில் பலர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற செயல்பாடுகளை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனாவின் இரு அலைகளிலும் ஒரே விதமான பாதிப்புகள் - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
இந்தியாவில் கொரோனாவின் இரு அலைகளும் ஒரே மாதிரியான பாதிப்புகளையே ஏற்படுத்துவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14,519 பேருக்கு கொரோனா
சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,88,818 ஆக அதிகரித்துள்ளது
3. கோவையில் கொரோனா சமூக பரவலா? - சுகாதாரத்துறை அதிகாரிகள் பதில்
கோவையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
4. தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. துருக்கியில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 61,028 பேருக்கு தொற்று உறுதி
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61,028 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.