சீனாவுடன் தேவை ஏற்படும் போது தொழில் போட்டி தொடரும் - அமெரிக்கா


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 4 March 2021 3:10 AM GMT (Updated: 4 March 2021 3:10 AM GMT)

சீனாவுடன் தேவை ஏற்படும் போது தொழில் போட்டி தொடரும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

வாஷிங்டன்

ஜனாதிபதி பைடன் தனது வெளியுறவுக் கொள்கை உரையில் சீனாவை அமெரிக்காவிற்கு "மிகவும் தீவிரமான போட்டியாளர்" என்று வர்ணித்ததோடு, மனித உரிமைகள், அறிவுசார் சொத்துக்கள் மற்றும் பொருளாதாரக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முனைகளில் சீனாவை  எதிர்கொள்வதாக உறுதியளித்தார்.

சீனா குறித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப்பின் இறுக்கமான அரசுக் கொள்கைகளை ஜோ பைடன் தலைமையிலான அரசு தளர்த்தி வருகிறது. இது குறித்து 
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் டோனி பிளிங்கன் கூறியதாவது:-

சீனாவுடனான உறவு தேவைப்படும் இடங்களில் போட்டியாகவும் அணுக்கமான இடங்களில் கூட்டுறவாகவும் இருக்கும். 

 பர்மா, ஏமன், எத்தியோப்பியா  நாடுகள் உள்பட நாம் எதிர்கொள்ள வேண்டிய கடுமையான நெருக்கடிகள் உள்ளன.ஆனால் சீனா முன்வைக்கும் சவால்கள் வேறுபட்டவை. சர்வதேச அமைப்புக்கு சீனா கடுமையான சவாலை முன்வைக்கிறது இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .

உலகப் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவது என்பது உள்நாட்டில் சரியான முதலீடுகளைச் செய்வது மற்றும் சீனா மற்றும் பிறரின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக செயல்படுவது ஆகும் என கூறினார்.

Next Story