இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,05,138 ஆக உயர்ந்துள்ளது.
லண்டன்,
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் நீடிக்கிறது. அங்கு உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 6,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கு இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,05,138 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 242 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 025 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 31 லட்சத்தை நெருங்கி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை மீறி காதலியை சந்திக்க விரும்பிய இளைஞர்களுக்கு மும்பை போலீசார் பக்குவமாய் பதில் அளித்தனர். காதலர்களான நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தனர்.