உலக செய்திகள்

உம் அல் குவைனில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற டிரைவர் 3 மணி நேரத்தில் கைது + "||" + 9303970_The driver who escaped after causing an accident in Umm al Quwain was arrested within 3 hours

உம் அல் குவைனில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற டிரைவர் 3 மணி நேரத்தில் கைது

உம் அல் குவைனில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற டிரைவர் 3 மணி நேரத்தில் கைது
உம் அல் குவைனில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற டிரைவரை போலீசார் 3 மணி நேரத்தில் கைது செய்தனர்.

உம் அல் குவைன்,

உம் அல் குவைனில், பலஜ் அல் முல்லா பகுதியின் முக்கிய சாலையில் ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் டிரைவர் ஒருவர் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த நபர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார். இதற்கிடையே காரை ஓட்டிவந்த டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்த நபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற டிரைவரை அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தனர். இதில், அவர் உம் அல் குவைன் அருகே நிற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விபத்து நடந்த 3 மணி நேரத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னிமலையில் அதிக பாரம் ஏற்றிய லாரி மின்கம்பியில் உரசியதால் மின்தடை- நிற்காமல் சென்ற லாரியை மின் ஊழியர் துரத்தி பிடித்தார்
சென்னிமலையில் அதிக பாரம் ஏற்றிய லாரி மின் கம்பியில் உரசியதால் மின்தடை ஏற்பட்டது. நிற்காமல் சென்ற லாரியை மின் ஊழியர் துரத்தி பிடித்தார்.
2. யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது
மதனின் யூடியூப் சேனல்களுக்கு கிருத்திகா தான் நிர்வாகி என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
3. அம்மாபேட்டை அருகே மரத்தில் கார் மோதி அரசு பஸ் டிரைவர் சாவு- நண்பர் படுகாயம்
அம்மாபேட்டை அருகே மரத்தில் கார் மோதி அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார்.
4. விபத்தில் வாலிபர் சாவு
நெல்லையில் விபத்தில் வாலிபர் பலியானார்.
5. இப்படி சிக்கி விட்டதே...!
காரைக்குடி மண்சாலையில் சரக்கு லாரியின் பின்சக்கரம் விபத்துக்குள்ளாகி சிக்கி கொண்டது.