உலக செய்திகள்

ஒரே நாளில் 17 பேர் பலி: அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது + "||" + 9302112_The total corona impact in the United States has exceeded 4 million

ஒரே நாளில் 17 பேர் பலி: அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது

ஒரே நாளில் 17 பேர் பலி: அமீரகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது
அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் 17 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதுகுறித்து அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அபுதாபி,

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 35 ஆயிரத்து 797 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 2 ஆயிரத்து 205 ஆக உயர்ந்துள்ளது.

இதில், நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 691 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 87 ஆயிரத்து 278 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 17 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,286 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 13 ஆயிரத்து 641 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா பாதிப்படைந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தனுஷ் பட வில்லன் உள்பட 2 நடிகர்களுக்கு கொரோனா
தமிழில் மாரி 2 படத்தில் தனுசுக்கு வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். மலையாளத்தில் லூசிபர், வைரஸ், லூகா, தீவடி, கோதா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.
2. அறந்தாங்கியில் அமரர் ஊர்தியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி
அமரர் ஊர்தியில் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலியானார்.
3. கொரோனா பரவல் அதிகரிப்பு: வேளாண் அலுவலர் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்; டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
4. கொரோனா 2-வது அலை அச்சம் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம்; மத்திய அரசு அனுமதி
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவி வருவதையடுத்து, அமைச்சக ஊழியர்களும், துறை சார்ந்த அரசு ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரியலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
5. கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: கடந்த 3 மாதங்களில் 276 நிறுவனங்கள் மூடப்பட்டன துபாய் மாநகராட்சி தகவல்
துபாயில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரத்து 189 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் விதிமுறைகள் மீறிய 276 நிறுவனங்கள் மூடப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.