உலக செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்க பயங்கரவாதிகள் சதி உளவு தகவலால் உச்சகட்ட பாதுகாப்பு + "||" + 9300012_Terrorists plot to attack US Congress

அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்க பயங்கரவாதிகள் சதி உளவு தகவலால் உச்சகட்ட பாதுகாப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்க பயங்கரவாதிகள் சதி உளவு தகவலால் உச்சகட்ட பாதுகாப்பு
அமெரிக்க நாடாளுமன்றத்தை நேற்று தாக்குவதற்கு பயங்கரவாதிகள் சதி செய்துள்ளதாக உளவு தகவல் வெளியானது. இதனால் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அவரது வெற்றியை உறுதி செய்து சான்றளிப்பதற்காக அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி கூடியது.

அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

அமெரிக்க வரலாறு காணாத இந்த சம்பவத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்டனர். இது உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 4-ந் தேதி (நேற்று) தாக்குதல் நடத்துவதற்கும், நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் பயங்கரவாதிகள் சதி செய்திருப்பதாக அமெரிக்க போலீசுக்கு நேற்றுமுன்தினம் உளவு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை எப்.பி.ஐ.யும், உள்நாட்டு பாதுகாப்பு துறையும் ஒரு அறிக்கை வெளியிட்டன.

அந்த அறிக்கையில், “பிப்ரவரி பிற்பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாத குழுவினர், அமெரிக்க நாடாளுமன்றத்தை கைப்பற்றுவது குறித்தும், அதற்கான திட்டங்கள் குறித்தும் விவாதித்து உள்ளனர். அத்துடன் மார்ச் 4-ந் தேதிக்குள் ஜனநாயக கட்சி எம்.பி.க்களை அகற்றுவதற்கான திட்டம் குறித்தும் விவாதித்து இருக்கிறார்கள். இதற்காக ஆயிரக்கணக்கானோரை வாஷிங்டன் செல்ல வற்புறுத்தவும் விவாதித்து உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

இந்த உளவுத்தகவலை வாஷிங்டன் கேபிட்டல் போலீசார் உறுதி செய்தனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், “மார்ச் 4-ந் தேதி நாடாளுமன்றத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம், பொதுமக்கள் மற்றும் எங்கள் போலீஸ் அதிகாரிகளை காப்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளோம். இந்த தகவலின் தன்மை காரணமாக இது குறித்த கூடுதல் விவரங்களை எங்களால் வழங்க முடியாது” என குறிப்பிட்டனர்.

இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத்தை பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என தகவல் வெளியானதை தொடர்ந்து பிரதிநிதிகள் சபை கூட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டது. அதே நேரம் திட்டமிட்டபடி செனட் சபை கூட்டம் நடத்தப்பட்டது.

பயங்கரவாதிகள் தாக்குதல் சதி திட்டம் தெரியவந்ததை அடுத்து வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிட்டல் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜார்ஜ் பிளாய்டு கொலை இப்போது தான் நாங்கள் அனைவரும் மீண்டும் சுவாசிக்கிறோம்- இளைய சகோதரர்
ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞரான ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் காவல் அதிகாரி டெரக் சாவின் குற்றவாளி என மினிபோலிஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு
பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.
3. அமெரிக்காவில் சுற்றுப்பயணம்; ஜனாதிபதி ஜோ பைடனுடன் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா நேரடி பேச்சுவார்த்தை
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
4. கொரோனா பாதுகாப்பு விதிமீறல்: கடந்த 3 மாதங்களில் 276 நிறுவனங்கள் மூடப்பட்டன துபாய் மாநகராட்சி தகவல்
துபாயில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரத்து 189 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் விதிமுறைகள் மீறிய 276 நிறுவனங்கள் மூடப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
5. அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக்கொன்ற பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் புரூக்ளின் சென்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் டான்ட் ரைட் (வயது 20) என்ற கருப்பின வாலிபரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து நழுவி காரில் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண் போலீஸ் அதிகாரியான கிம் பாட்டர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.