உலக செய்திகள்

நியூசிலாந்தில் தொடர்ந்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ; சுனாமி எச்சரிக்கை + "||" + New Zealand rocked by fourth quake as scary footage emerges

நியூசிலாந்தில் தொடர்ந்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ; சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தில்  தொடர்ந்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ; சுனாமி எச்சரிக்கை
நியூசிலாந்தில் தொடர்ந்து 4 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ; சுனாமி எச்சரிக்கை ஆயிரகணக்கான மக்கள் வெளியேற்றம்
வெலிங்டன்

நியூசிலாந்தில், 8.1 ரிக்டர் அளவிலான சக்த்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால்  சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கடலோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. யாரும் வீட்டில் தங்க வேண்டாம்" என்று தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (நேமா) தெரிவித்துள்ளது.

காலை 8:28 மணிக்கு (1928 வியாழக்கிழமை ஜிஎம்டி) நியூசிலாந்து கடற்கரையிலிருந்து  சுமார் 1,000 கிலோமீட்டர் (640 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூகம்பத்தை உணராவிட்டாலும் காத்திருக்க வேண்டாம். ஆபத்தான  சுனாமி  வரலாம் மக்கள் இந்த பகுதிகளை காலி செய்ய வேண்டும் என்று தேசிய அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

"மக்கள் கடற்கரை பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும்.  போக்குவரத்து நெரிசல்களை  தவிர்ப்பதற்காக தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் அழைத்துச் செல்ல வேண்டாம் என  அவசர சேவை செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரே ரோசிக்னோல் அறிவித்து உள்ளார்.

நான்காவது பெரிய பூகம்பம் இன்று காலை நியூசிலாந்தை உலுக்கியது, வட தீவின் கடற்கரையைத் தாக்கிய மிகப்பெரிய கடல் அலை எழுச்சியின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளிவந்துள்ளன.கெர்மடெக் தீவுகளில் நான்காவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 6.2 அளவு அளவிடப்பட்டு உள்ளூர் நேரப்படி மதியம் 12:12 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பு - நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்
கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது.
2. அசாமில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டரில் 2.7 ஆக பதிவு
அசாமில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
நியூசிலாந்து நாட்டில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் அந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
4. மிசோரமில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.8 ஆக பதிவு
மிசோரமில் திடீரென மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
5. ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.