2021-ம் ஆண்டிற்கான ராணுவ பட்ஜெட்டை 6.8% உயர்த்தியுள்ளது சீனா


2021-ம் ஆண்டிற்கான ராணுவ பட்ஜெட்டை 6.8% உயர்த்தியுள்ளது சீனா
x
தினத்தந்தி 5 March 2021 9:33 AM GMT (Updated: 5 March 2021 9:33 AM GMT)

பட்ஜெட்டில் 209 பில்லியன் டாலர் நிதியை சீனா தனது நாட்டு ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது.

பெய்ஜிங், 

உலகிலேயே ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2-வது இடத்தில் உள்ளது. 20 லட்சம் வீரர்களுடன் சீன ராணுவம் உலகின் பெரிய ராணுவமாக திகழ்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக சீனா தனது ராணுவத்தில் பல முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளிடையே செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் கடற் படை மற்றும் விமானப்படையை விரிவாக்கம் செய்துள்ளது. குறிப்பாக கடற்படையில் புதிதாக போர் கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. 

அண்டை நாடுகளிடம் வாலாட்டும் சீனா, ஆண்டுக்கு ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை தொடர்ந்து  உயர்த்தி வருகிறது. இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட் 6.8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 209 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. 


Next Story