பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 25,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + In France, 25,279 people have been confirmed with corona in the last 24 hours
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 25,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரான்சில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,35,595 ஆக உயர்ந்துள்ளது.
பாரிஸ்,
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 25,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் பிரான்சில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,35,595 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 293 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் பிரான்சில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87,835 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 2.6 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.