உலக செய்திகள்

சீன துணை மந்திரியுடன் இந்திய தூதர் சந்திப்பு; லடாக்கில் படைகளை திரும்ப பெற வலியுறுத்தல் + "||" + Indian Ambassador meets Chinese Deputy Foreign Minister; Urging withdrawal of troops in Ladakh

சீன துணை மந்திரியுடன் இந்திய தூதர் சந்திப்பு; லடாக்கில் படைகளை திரும்ப பெற வலியுறுத்தல்

சீன துணை மந்திரியுடன் இந்திய தூதர் சந்திப்பு; லடாக்கில் படைகளை திரும்ப பெற வலியுறுத்தல்
சீனாவில் அந்நாட்டு வெளியுறவு துறை துணை மந்திரியை சந்தித்த சீனாவுக்கான இந்திய தூதர் கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை திரும்ப பெற வலியுறுத்தினார்.
பீஜிங்,

லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த மே மாதம் அத்துமீறிய சீன ராணுவத்தால் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

இதனால் இந்தியாவும், சீனாவும் தலா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை எல்லையில் குவித்ததால் பதற்றம் நீடித்தது. எனவே படைகளை திரும்பப்பெற்று பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதன் பலனாக கடந்த பிப்ரவரி 10ந்தேதி முதல் கிழக்கு லடாக்கில் படை விலக்கல் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக அங்குள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைப்பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை இரு தரப்பும் மேற்கொண்டன.

இந்நிலையில், சீனாவின் பீஜிங் நகரில் அந்நாட்டு வெளியுறவு துறை துணை மந்திரி லுவோ ஜாவோஹுய் மற்றும் சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் சந்தித்து பேசினர்.  டோக்லாம் விவகாரத்தின்பொழுது, இந்தியாவுக்கான சீன தூதராக லுவோ இருந்துள்ளார்.

இந்த சந்திப்பில், கிழக்கு லடாக்கின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து படைகளை முழுவதும் வாபஸ் பெற வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டது.  இதனால், எல்லை பகுதியில் அமைதி திரும்ப உதவியாக அமையும் என்றும் இருதரப்பு உறவில் வளர்ச்சிக்கான நிலைகளை வழங்கும் என்றும் பேசப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்.
2. தமிழகத்தில் தடுப்பூசி தேவை அதிகரிப்பு; ராஜ்ய சபையில் தி.மு.க., அ.தி.மு.க. வலியுறுத்தல்
தமிழகத்தில் தடுப்பூசி தேவை அதிகரித்து உள்ளது பற்றி ராஜ்ய சபையில் தி.மு.க., அ.தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
3. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தல்
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தல்.
4. தெற்கு ரெயில்வே பணிகளில் 50% தமிழர்களுக்கு ஒதுக்க பா.ம.க. நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தல்
தெற்கு ரெயில்வே பணிகளில் 50% தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
5. 2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் தடுப்பூசி பெற முதல்-அமைச்சரிடம் ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
தமிழகத்துக்கு 2011ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் தடுப்பூசி பெற்றுவர முதல்-அமைச்சரிடம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.