உலக செய்திகள்

ஈரானில் பயணிகள் விமானத்தை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக தகவல் + "||" + Iran's Revolutionary Guard says passenger airplane hijacking disrupted

ஈரானில் பயணிகள் விமானத்தை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக தகவல்

ஈரானில் பயணிகள் விமானத்தை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக தகவல்
ஈரானில் பயணிகள் விமானம் கடத்த திட்டமிட்டிருந்த சதியை வெற்றிகரமாக முறியடித்ததாக புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

ஈரானின் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான சொந்தமான ஃபோக்கர் 100 விமானம் அஹ்வாஸ் விமான நிலையத்தில் இருந்து மஷாத் நோக்கிச் செல்லவிருந்த பயணிகள் விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு 10.22 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

புறப்பட்டுச் சென்ற விமானம் ஈரானில் உள்ள இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.  விமானத்தில்  சந்தேகப்படும் படியான நபர் ஒருவர் இருந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள்,  ஈரான் புரட்சிகர காவல் படைக்குத் தகவல் அளித்ததனர். இதையடுத்து, விமானம் இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

மேலும், அந்த நபரை அதிகாரிகள் விசாரித்தபோது விமானத்தைத் திசைதிருப்பவும், கடத்த முயன்றாகவும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர். கடத்த முயன்றதாக கூறப்படும் நபர் பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ஏமனில் ஈரான் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
ஏமன் நாட்டில் செங்கடல் பகுதியில் ஈரான் அரசுக்கு சொந்தமான எம்.வி.சாவிஸ் என்கிற சரக்கு கப்பல் கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.
2. ஈரானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலி: 3 பேர் காயம்
ஈரானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. ஈரான் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் - மத்திய அரசு தகவல்
ஈரான் நாட்டிற்கு மத்திய அரசின் சார்பில் மொத்தம் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
4. ஈரானின் அணுசக்தி பிரச்சனையின் தற்போதைய நிலைமை அபாய கட்டத்தில் உள்ளது - சீனா
ஈரானின் அணுசக்தி பிரச்சனையின் தற்போதைய நிலைமை அபாய கட்டத்தில் உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
5. கார்ட்டூன் பெண் கதாப்பாத்திரங்களுக்கும் 'ஹிஜாப்' கட்டாயம் - ஈரான் அரசு உத்தரவு!
கார்ட்டூன் பெண் கதாப்பாத்திரங்களுக்கும் 'ஹிஜாப்' கட்டாயம் - என ஈரான்அரசு உத்தரவிட்டு உள்ளது.