ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை


ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
x
தினத்தந்தி 6 March 2021 7:29 PM GMT (Updated: 6 March 2021 7:29 PM GMT)

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது.

அபுதாபி,

ஐக்கிய அரபு அமீரகத்தித்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது. 

இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 26 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் அமீரகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 89 ஆயிரத்து 304 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 10 பேர் உயிரிழந்ததையடுத்து, தற்போது மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,296 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தித்தில் மொத்தம் 14 ஆயிரத்து 677 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story