கொரோனா தடுப்பூசி; ஜப்பானில் முதன்முறையாக 30 வயது பெண்ணுக்கு பின்விளைவு


கொரோனா தடுப்பூசி; ஜப்பானில் முதன்முறையாக 30 வயது பெண்ணுக்கு பின்விளைவு
x
தினத்தந்தி 7 March 2021 12:57 AM GMT (Updated: 7 March 2021 12:57 AM GMT)

ஜப்பானில் முதன்முறையாக கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்ட 30 வயது பெண்ணுக்கு கடுமையான ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 37 ஆயிரத்து 634 ஆக உயர்ந்து உள்ளது.  இதுவரை அந்நாட்டில் 8,196 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை கழகம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், ஜப்பான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், 30 வயது மருத்துவ பணியாளர் ஒருவர் பைசர் தடுப்பூசி எடுத்து கொண்டார்.  அவருக்கு தடுப்பூசி போட்டதற்கு பின்னரான ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி மருத்துவர் ஒருவர் கூறும்பொழுது, தடுப்பூசியுடன் இந்த ஒவ்வாமை பாதிப்புக்கு தொடர்பு இருக்க கூடும் என்றும், அந்த பெண்ணுக்கு உள்ள ஆஸ்துமா நோயால் இது ஏற்பட்டிருக்க கூடும் என்றும் கூறி உள்ளார் என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Next Story