உலக செய்திகள்

சர்வதேச பெண்கள் தினம்: அமீரக துணை அதிபர் வாழ்த்து + "||" + 9338077_Congratulations to the Vice President of the United States

சர்வதேச பெண்கள் தினம்: அமீரக துணை அதிபர் வாழ்த்து

சர்வதேச பெண்கள் தினம்: அமீரக துணை அதிபர் வாழ்த்து
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துபாய்,

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தையொட்டி பெண்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

அமீரக பெண்கள் பல்வேறு துறைகளிலும் சிறப்பான சாதனைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக அறிவியல் ஆராய்ச்சி, பொருளாதாரம், சமூக மேம்பாடு என அனைத்து துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் சேவைகளை செய்கின்றனர்.

இத்தகைய சாதனைகளை மேற்கொள்ள உதவியாக இருந்து வரும் அமீரக தாய்மார்களுக்கு தனது வாழ்த்துகள் உரித்தாகட்டும். இது குறித்து தான் பெருமிதம் அடைகிறேன்.

அமீரகத்தின் திட்டங்களை, நோக்கங்களை, குறிக்கோள்களை அடைவதில் ஆரம்பம் முதலே பெண்கள் உறுதுணையாக இருந்து வருகின்றனர். தொடர்ந்து அமீரகத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சியிலும் அமீரகப் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகிறது. இந்த பங்களிப்பு தொடர சர்வதேச பெண்கள் தினமான இன்று எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அந்த பதில் குறிப்பிட்டுள்ளார்.

அமீரகத்தில் பெண்கள் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வீட்டில் ஏற்படும் துன்புறுத்தல்கள் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் அதிகமான கண்காணிப்பு பணிகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி அமீரக மந்திரிகளும், பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதனையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் கொரோனா பாதுகாப்பை கருத்தில் கொண்டு காணொலி காட்சி வழியாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகில் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளித்து வரும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தை வகிக்கிறது. அமீரக மத்திய தேசிய கவுன்சிலில் உள்ள 40 இடங்களில், பாதி இடங்கள் அதாவது 20 இடங்களில் பெண்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலினுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்து
தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வாழ்த்து தெரிவித்து உள்ளது.
2. அமேசோனியா 1 செயற்கைக்கோள் ஏவும் பணி வெற்றி: பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
அமேசோனியா 1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் பணி வெற்றியடைந்த நிலையில் பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
3. சாதனை மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து
சாதனை மாணவிக்கு கலெக்டர் வாழ்த்து