உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.74 கோடியைக் கடந்தது


உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.74 கோடியைக் கடந்தது
x
தினத்தந்தி 8 March 2021 1:03 AM GMT (Updated: 8 March 2021 1:03 AM GMT)

உலக அளவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.74 கோடியைக் கடந்துள்ளது.

ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.74 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,74,31,033 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,29,35,586 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 26 லட்சத்து 04 ஆயிரத்து 786 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,18,90,661 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,731 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,586 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் 80,024 பேருக்கும், ரஷ்யாவில் 10,595 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story