உலக செய்திகள்

தென்ஆப்பிரிக்காவில் போலி கொரோனா தடுப்பூசிகள் விற்பனை + "||" + fake vaccines seized in China and South Africa are ‘tip of iceberg’

தென்ஆப்பிரிக்காவில் போலி கொரோனா தடுப்பூசிகள் விற்பனை

தென்ஆப்பிரிக்காவில் போலி கொரோனா தடுப்பூசிகள் விற்பனை
தென் ஆப்பிரிக்காவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் வலம் வருவதாகவும் எனவே மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தென் ஆப்பிரிக்காவின் தேசிய போலீஸ் ஆணையம் எச்சரித்துள்ளது.

கேப் டவுன், 

ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக தென் ஆப்பிரிக்கா உள்ளது. அங்கு 15 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கியுள்ள கொரோனா வைரஸ், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும் பறித்துள்ளது.

வைரஸ் பரவும் அதே வேகத்தில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் வலம் வருவதாகவும் எனவே மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தென் ஆப்பிரிக்காவின் தேசிய போலீஸ் ஆணையம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேசிய போலீஸ் படை நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் வடக்கு மாகாணம் குவாடெங்கில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து 4 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 2 கோடியே 92 லட்சம்) மதிப்புடைய போலி கொரோனா தடுப்பூசிகள் மற்றும் முக கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கடத்தல்காரர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தேசிய போலீஸ் ஆணையம் தற்போது தெரிவித்துள்ளது. 

அதேசமயம் நாட்டில் இன்னமும் போலி கொரோனா தடுப்பூசிகள் விற்கப்படுவதாக அந்த ஆணையம் எச்சரித்துள்ளது.‌ இணையம் வழியாகவும் கள்ளச் சந்தையிலும் போலி கொரோனா தடுப்பூசிகள் விற்கப்படுவதாகவும் எனவே மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க நிறுவனங்கள் மறுப்பு; பரிசீலிப்பதாக ஜோ பைடன் நிர்வாகம் உறுதி
கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. இப்பிரச்சினையை பரிசீலிப்பதாக ஜோ பைடன் அரசு உறுதி அளித்துள்ளது.
2. யானை கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட வேட்டைக்காரர்கள் - ஒருவர் பலி
யானைகளை வேட்டையாட சென்ற வேட்டைக்காரர்கள் யானை கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.
3. அமீரகத்தில் ஒரே நாளில் 45 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; சுகாதார அமைச்சகம் தகவல்
அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
4. புதிய விதிமுறைகளுடன் இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி; 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியும் அவசியம்
முஸ்லிம்களுக்கு புதிய விதிமுறைகளுடன் இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக செல்பவர்கள், கொரோனா தடுப்புக்கான 2-வது ஊசியும் செலுத்தி கொள்வது அவசியமாக்கப்பட்டு உள்ளது.
5. தமிழகத்திற்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்திற்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.