மெக்சிகோவில் பெட்ரோல் டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து; 11 பேர் உடல் கருகி பலி


மெக்சிகோவில் பெட்ரோல் டேங்கர் லாரி மீது பஸ் மோதி விபத்து; 11 பேர் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 12 March 2021 5:47 PM GMT (Updated: 12 March 2021 5:47 PM GMT)

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நியூவோ லியோன் மாகாணத்தின் தலைநகர் மான்டேரியில் இருந்து பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

மான்டேரியை அடுத்த சாலினாஸ் விக்டோரியா என்ற நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது.‌அதே சாலையில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.இந்த நிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது. பின்னர் அந்த பஸ் சாலையின் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்து. இதைத்தொடர்ந்து பஸ்சிலும் தீ பரவி 2 வாகனங்களிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. சற்று நேரத்தில் 2 வாகனங்களும் முற்றிலுமாக எரிந்து உருக்குலைந்து போயின.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அடையாளம் காணமுடியாதபடி அவர்களது உடல் கறி கட்டைகளானது. மேலும் இந்த விபத்தில் 7 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story