உலக செய்திகள்

கஜகஸ்தானில் விபத்தில் சிக்கிய ராணுவ போக்குவரத்து விமானம்; 4 பேர் உயிரிழப்பு + "||" + Military transport plane crashes in Kazakhstan; 4 fatalities

கஜகஸ்தானில் விபத்தில் சிக்கிய ராணுவ போக்குவரத்து விமானம்; 4 பேர் உயிரிழப்பு

கஜகஸ்தானில் விபத்தில் சிக்கிய ராணுவ போக்குவரத்து விமானம்; 4 பேர் உயிரிழப்பு
கஜகஸ்தானில் ராணுவ போக்குவரத்து விமானம் விபத்தில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
அல்மேட்டி,

கஜகஸ்தான் நாட்டில் ஆன்-26 ரக ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று நூர்-சுல்தான்-அல்மேட்டி வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபொழுது, ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மறைந்தது.  இதன்பின்னர் அவசரமாக தரையிறங்கி உள்ளது.

அந்த விமானம், தெற்கே அல்மேட்டி நகரில் உள்ள அல்மேட்டி சர்வதேச விமான நிலையத்தில் ஓடுதளத்தில் தரையிறங்கியபொழுது திடீரென தீப்பிடித்து கொண்டது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.  2 பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அந்நாட்டு அவசரகால சூழ்நிலைகளுக்கான அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதுபற்றி விசாரணையும் நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை விமான நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரி பையில் சிக்கிய தோட்டாக்கள்
மதுரை விமான நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரி பையில் சிக்கிய தோட்டாக்கள்.
2. ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய அமெரிக்க தடகள சாம்பியன்: 5 ஆண்டுகள் விளையாட தடை
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய அமெரிக்காவின் 100 மீட்டர் தடகள சாம்பியன் பிரையன்னா மெக்நீல் 5 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.