அடுத்த மாதம் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார்


அடுத்த மாதம் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார்
x
தினத்தந்தி 16 March 2021 7:00 PM GMT (Updated: 16 March 2021 7:00 PM GMT)

போரிஸ் ஜான்சன் அடுத்த மாத (ஏப்ரல்) இறுதியில் இந்தியாவுக்கு வருகிறார்.

லண்டன், 

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த ஜனவரி மாதம் இந்தியா வருவதாக இருந்தது. இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால், இங்கிலாந்தில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்ததால், அவரது வருகை ரத்தானது.

இந்தநிலையில், போரிஸ் ஜான்சன் அடுத்த மாத (ஏப்ரல்) இறுதியில் இந்தியாவுக்கு வருகிறார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வர்த்தக வாய்ப்புகளை ஆராய்வதே அவரது வருகையின் நோக்கம். தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்னோடியாக கருதப்படும் இந்தியா-இங்கிலாந்து தரம் உயர்த்தப்பட்ட வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தம் நீண்ட காலமாக நிறைவேறாமல் உள்ளது. 

போரிஸ் ஜான்சனின் இந்த பயணத்தின்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பாா்க்கப்படுகிறது. பிரதமர் மோடியும், போரிஸ் ஜான்சனும் இதில் கையெழுத்திடுவார்கள். இங்கிலாந்து மந்திரி தாரிக் அகமது இந்தியாவில் தங்கி இருந்து இதற்கான பணிகளை கவனித்து வருகிறார்.


Next Story